அன்பு உறவினர்களே... நண்பர்களே…

அம்மாவின் கைப்பிடித்து நடை பழகிக்கொண்டேன்.
அப்பாவின் கைப்பிடித்து உலகம் அறிந்துகொண்டேன்.
ஆசான் கைப்பிடித்து அறிவை வளர்த்துக்கொண்டேன்.
தாய் மாமாவின் கைப்பிடித்து வாழ்வை உணர்ந்துகொண்டேன்.
இப்போது கனவு, லட்சியம், தொழில் என்று
யார் கையையும் பிடிக்காமல்,
நான் தனியாக ஓடிக்கொண்டு இருக்கையில்,
வாழ்க்கை ஓர் அதிசயத்தை நிகழ்த்தியது.
“பூரணி” என்ற தாரகை மூலம்
என் வாழ்க்கை ”பூரணம்” ஆகவேண்டும் என்று அது உணர்த்தியது.
என்னவளைக் கண்டுபிடித்துவிட்டேன்.
மோதிரம் அணிவித்து இருவரும் ஓர் உறுதி ஏற்றுக்கொண்டோம்!

அதன்படி 29 மே 2015 அன்று, கோயம்புத்தூர் (சாமளாபுரம்), முத்துசாமி-வேலுமணி அவர்களது புதல்வியும், சிவகுமார் அவர்களின் சகோதரியுமான, பூரணி என்கின்ற பெண்ணை, அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்து, என் வாழ்க்கையின் அடுத்த பரிணாமத்தை துவங்க இருக்கிறேன். அதைத்தொடர்ந்து 31 மே 2015 அன்று நடக்கும் திருமணவரவேற்பு நிகழ்ச்சியில், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு எங்களை ஆசிர்வதித்து வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறேன்.

எதற்கு: திருமண வரவேற்பு.
எப்போது: 31 மே 2015, ஞாயிற்றுக்கிழமை. 11am - 3pm.
எங்கே: ராஜம்மாள் திருமண மஹால், அன்னதானப்பட்டி, சேலம்.
ஏன்: உங்களது ஆசிர்வாதமும், பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் வேண்டி.
இடத்தின் வரைபடம்: இங்கே சொடுக்கவும்

Copyright © 2015 by PooraniPraveen.com. All Rights Reserved.